ஜும்ஆவில் இகாமத்திற்கு பிறகு அறிவிப்பு செய்வது
தொகுப்பு: முஃப்தி M.ஸஃபியுல்லாஹ் கான் தாவூதி ஃபாஜில் மழாஹிரி ⚖️ மஸ்அலா எண் : 1285 கேள்வி: ஜும்ஆ குத்பா முடிந்தப் பிறகு*استووا صفوفكم "உங்கள் ஸஃப்களை நேராகவும், நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்" போன்ற வார்த்தைகளை இமாம் சொல்லலாமா? الجواب حامدا ومصليا ومسلما: ஜும்ஆ குத்பாவிற்கு பிறகு இமாம் *استووا صفوفكم "உங்கள் ஸஃப்பை சரி செய்து கொள்ளுங்கள்"* என்பதை இகாமத்திற்குப் பிறகு சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் அமலும் அப்படிதான் இருந்தது. சில மார்க்க அறிஞர்கள் இகாமத் சொல்வதற்கு முன்பாக கூறுவதற்கும் அனுமதி அளிக்கிறார்கள், ஏனெனில் அதில் தவறேதும் இல்லை, இந்த அறிவிப்பு செய்வதற்கு ஏற்படும் இலேசான இடைவெளியால், தொழுகைக்கு எந்த பாதிப்பும் வராது. மேலும் ஸஃப்புகளை சரி செய்வது இமாமின் பொறுப்பாக இருக்கிறது. اصل تو یہ ہے کہ صفیں درست کرنے کا اعلان ”اقامت“ کے بعد کیا جائے حضور صلی اللہ علیہ وسلم اور صحابہٴ کرام سے اسی طرح ثابت ہے؛ باقی بعض علماء نے اقامت سے پہلے کہنے کی بھی گنجائش دی ہے؛ اس لیے اس میں بھی کوئی حرج نہیں؛ اس اعلان کی وجہ سے جو فص...